உடல் ஆரோக்கியத்திற்கான பழரசங்கள் :
-
காரட் + இஞ்சி + ஆப்பிள் = நமது உடல் உறுப்புகளை சுத்தம் செய்து வலுப் பெறச் செய்கிறது.
- ஆப்பிள் + வெள்ளரிக் காய் + செலெரி கீரை = கான்சர் வருவதை தடுக்கிறது; வயிறு கெடாமல் இருக்கவும் தலை வலி வாராமல் பாதுகாக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் நல்லது.
- தக்காளி + காரட் + ஆப்பிள் = சருமப் பாதுகாப்பிற்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கவும் நல்லது.
- பாகற்காய் + ஆப்பிள் + பால் = உடம்பின் உள்சூட்டைக் குறைக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
- ஆரஞ்சு + இஞ்சி + வெள்ளரிக் காய் = சருமம் உலராமலும் வறண்டு போகாமலும் காக்கிறது.
- அ ன்னாசி + ஆப்பிள் + தர்பூசணி = உடலில் சேரும் அதிகப்படி உப்பை நீக்கி சிறுநீரகத்தைக் காக்கிறது.
- ஆப்பிள் + வெள்ளைக் காய் + கிவி பழம் = சருமத்தைக் காக்கிறது.
- பேரிப்பழம் + வாழைப் பழம் = இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப் படுத்துகிறது.
- காரட் + ஆப்பிள் + பேரி + மாம்பழம் = உடல் உஷ்ணத்தை குறைக்கிறது; உடலின் நச்சுத் தன்மையை போக்குகிறது; இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
- தேன் + திராட்சை + தர்பூசணி + பால் = வைட்டமின் C + B2 இவற்றில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது.
- பப்பாளி + அன்னாசி + பால் = விட்டமின்கள் C, E, மற்றும் இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால் சருமப் பளபளப்புக்கும் உடலின் வளர் சிதை மாற்றத்திற்கும் உதவும்.
- வாழைப் பழம் + அன்னாசி + பால் = உடலுக்குத் தேவையான போஷாக்கைக் கொடுக்கின்றன. மலச் சிக்கல் வராமல் பாது காக்கும்.
Key word:.உடல் ஆரோக்கியத்திற்கான பழரசங்கள்


No comments:
Post a Comment