ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 16 வரை- கே.பி.வித்யாதரன் ‘ஜோதிட ரத்னா’
மேஷம்:மலர்கள் உதிர்வதால் செடிகள் சோர்வடைவதில்லை என்பதை அறிந்த நீங்கள் இழப்புகள், ஏமாற்றங்களைக் கண்டு என்றுமே அஞ்சியதில்லை. உங்கள் பாக்யாதிபதியான குருபகவான் சுகாதிபதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் செல்வதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடிவடையும். குலதெய்வத்திற்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். தாய்வழி ரத்த பந்தங்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
உங்கள் தனாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீட்டிலிருந்த கழிவுநீர் பிரச்னை, குடிநீர் பிரச்னை தீரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். உறவினர்கள் மத்தியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சீமந்தம் உள்ளிட்ட விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குருபகவான் தன ஸ்தானத்தில் தொடர்வதால் பணம் வரும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் பகை வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். தந்தைவழி உறவினர்கள் வகையில் அலைச்சலும் மன உளைச்சலும் வந்துபோகும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் பாதகாதிபதியான சனியுடன் சேர்ந்து 6ல் நிற்பதால் தொண்டை வலி, காய்ச்சல் வந்துபோகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக் கூடும்.
அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ராகு 8ல் நிற்பதால் கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அதிரடி லாபம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
ராசியான தேதிகள்:ஜூலை 16, 18, 19, 24, 25, 26, 27, 31 ஆகஸ்ட் 1, 2, 3, 5, 12, 15.
சந்திராஷ்டம தினங்கள்:ஜூலை 28, 29 ஆகிய தினங்களில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:செங்கல்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள ஒரகடத்தில் நெஞ்சில் கையை இருத்திய நிலையில் அருளும் யோகராமரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.
மிதுனம்மிதுனம்:வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது இறுதியல்ல என்பதை உணர்ந்த நீங்கள் எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே நின்று உங்களை கோபப்பட வைத்த சூரியன் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகி விட்டதால் கோபம் விலகும். வேலைச்சுமை குறையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனே முடியும். என்றாலும் சூரியன் 2ம் வீட்டில் அமர்வதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். ஆகஸ்ட் 2ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் புதன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களை கூட எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.
உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் 29ந் தேதி முதல் ராசிக்குள் அமர்வதால் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். சனியும் செவ்வாயும் 4ல் நிற்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அக்கம் பக்கம் வீட்டாருடன் மோதல்கள் வந்துபோகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். குரு 12ல் நிற்பதால் மனைவி வழியில் செலவு, அலைச்சல் வந்து நீங்கும்.
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 6ல் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தரவேண்டாம். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர் கல்வியை போராடி முடிப்பீர்கள். மாணவர்களே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். மற்றவர்களை நம்பி அனுபவமில்லத தொழிலில் இறங்க வேண்டாம்.
புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். செங்கல், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இங்கிதமானப் பேச்சாலும் யதார்த்தமான முடிவுகளாலும் நினைத்ததை முடித்துக் காட்டும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 21, 22, 23, 24, 28, 29, 30, 31 ஆகஸ்ட் 6, 7, 8, 9, 11, 16.
சந்திராஷ்டம தினங்கள்:ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3ந் தேதி காலை 10:30 மணி வரை வீண் கவலைகள், டென்ஷன் வந்துபோகும்.
பரிகாரம்:செங்கல்பட்டிற்கு அருகேயுள்ள சிங்கப் பெருமாள் கோயிலில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை வணங்குங்கள். முதியோர்களுக்கு குடையும் செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.
ரிஷபம்ரிஷபம்:வாழ்க்கை என்பது கசந்து, துவர்த்து, புளித்து, பின்பு இனிப்பதாகும் என்பதை அறிந்த நீங்கள் கஷ்ட நஷ்டங்களால் கசங்கியதில்லை. உங்களின் தன பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி பல விஷயங்களை முடிப்பீர்கள். உங்கள் பேச்சுக்கும் கருத்துக்கும் மரியாதை கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சில உதவிகளும் அவர்களால் உண்டு. உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 29ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2ல் அமர்வதால் வேலைச்சுமை குறையும். காது, பல் வலி விலகும்.
உங்கள் பிரபல யோகாதிபதியான சூரியன் 3ல் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத உதவிகள் வி.ஐ.பிகளிடமிருந்து கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும். தாயாருக்கு நெஞ்சு வலி, முதுகு வலி வந்துபோகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும் குருவும் நின்று கொண்டிருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது தூக்கமில்லாமல் போகும். பலவீனத்தாலும் பலவித சிந்தனையாலும் நெஞ்சு வலிக்கும். பயந்து விடாதீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். முன்கோபத் தால் குடும்பத்தில் குழப்பங்கள் வரக்கூடும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
5ல் சனி, செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் செலவுகள் இருக்கும். உங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. மகளுக்கு திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்பத்திரத்தை சரி பார்க்கவும். ராகு 7ல் நிற்பதால் எதிலும் ஒருவித பதட்டம், படபடப்பு, தடுமாற்றம் வந்து செல்லும். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத வேலைகள் முடியும். கனவுத் தொல்லை, சுவாசக் கோளாறுகள் வரக்கூடும். மாணவர்களே! கல்யாணம், திருவிழா என்று அலையாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.
வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வந்துபோகும். பங்குதாரர்களுடன் கொஞ்சம் போராட வேண்டி வரும். ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள்.எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். விவசாயிகளே! விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். மகசூலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை பயன்படுத்துவீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 19, 20, 21, 22, 26, 28, 29 ஆகஸ்ட் 4, 5, 6, 7, 8, 9, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:ஜூலை 30, 31 ஆகிய நாட்களில் யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.
பரிகாரம்:சீர்காழிக்கு அருகேயுள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரரை தரிசியுங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.
கடகம்கடகம்:அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல உங்களை ஏளனமாக பேசுபவர்களையும் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துபவர்கள் நீங்கள். சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் நீடிப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அதிக சம்பளத்துடன் புது உத்யோகம் அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் முன்கோபத்தால் குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் வந்துபோகும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
உங்களின் பிரபல யோகாதிபதி செவ்வாய் 3ல் நிற்பதால் சவாலான காரியங்களை கூட விரைந்து முடிப்பீர்கள். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். ஆனால் செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாக பயன் படுத்தக் கூடும். சகோதர வகையில் செலவினங்கள் அதிகரிக்கும். 5ல் ராகுவும் நீடிப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உங்கள் பாக்யாதிபதி குரு லாப வீட்டில் நிற்பதால் தந்தை வழியில் உதவி உண்டு. தந்தையார் உடல் சீராகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். மாணவர்களே! கூடாப் பழக்கம் விலகும்.
நினைவாற்றல் பெருகும். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். கடையை நவீன மயமாக்குவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். அழகு சாதனப் பொருட்கள், உணவு, கெமிக்கல் வகைகளால் லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! பழைய மோட்டார் பம்பு செட்டை மாற்றுவீர்கள். நீர்பாசனப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 16, 22, 23, 24, 25, 30, 31 ஆகஸ்ட் 2, 8, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:ஆகஸ்ட் 3ந் தேதி காலை 10:30 மணி முதல் 4 மற்றும் 5ந் தேதி மாலை 6 மணி வரை பயணங்களின் போது கவனம் தேவை.
பரிகாரம்:மதுரைக்கு அருகேயுள்ள திருப்பரங்குன்றம் முருகனை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
சிம்மம்சிம்மம்:மனம் போன போக்கில் போகாமல் தனக்கென ஒரு தனிப்பாதையில் பயணிக்கும் நீங்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டுமென நினைப்பீர்கள். உங்கள் தன-லாபாதிபதி புதன் சாதகமான நட்சத்திரங்களில் இந்த மாதம் முழுக்க செல்வதால் சமயோசித புத்தியுடன் நடந்து கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகள் உங்களின் புதிய திட்டங்கள் நிறைவேற உதவுவார்கள். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் ராசிநாதன் சூரியன் 12வது வீட்டில் மறைந்து நிற்பதால் கொஞ்சம் அலைச்சல், டென்ஷன் இருக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.
தூக்கம் குறையும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனி 2ல் தொடர்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். லேசாக காது, கண் வலி வந்துபோகும். யாருக்கும் காரெண்டர் கையெழுத்திட வேண்டாம். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப் புழக்கம் உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு 10ல் நிற்பதால் அவ்வப்போது மனக் குழப்பங்கள், தடுமாற்றங்கள் வந்துபோகும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டு பிரிவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிரபல யோகாதிபதியான செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பதால் பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். முக்கிய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சின்னச் சின்ன
விபத்துகள் வந்துபோகும்.
அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப்பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். தாயாரை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். மாணவர்களே! போராடி சில பாடங்களில் வெற்றி பெறுவீர்கள். வகுப்பறையில் அரட்டை வேண்டாம். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.
மரவகைகள், பெட்ரோல் பங்க், ஹோட்டல் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் சிறுசிறு ஏமாற்றம், டென்ஷன் வந்து செல்லும். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் உயரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! நிலப் பிரச்னைகளை பெரிது படுத்தாமல் சுமுகமாக பேசித் தீர்ப்பது நல்லது. விளைச்சல் பெருகும். நாவடக்கமும் எச்சரிக்கை உணர்வும் தேவைப்படும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 16, 18, 24, 25, 26, 27 ஆகஸ்ட் 1, 2, 3, 12, 13, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:ஆகஸ்ட் 5ந் தேதி மாலை 6 மணி முதல் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம்:கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்தில் ராமருக்கு அருகே கையில் வீணையை ஏந்தியபடி காட்சியளிக்கும் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
கன்னிகன்னி:யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத நீங்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையுடன் வாழ்வீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சனியும் செவ்வாயும் அமர்ந்திருப்பதால் முன்கோபத்தால் கொஞ்சம் படபடத்துப் பேசுவீர்கள். அடுத்தடுத்து வேலை இருந்துக் கொண்டே இருக்கும். காய்ச்சல், சளித் தொந்தரவு வந்துபோகும். சகோதர வகையில் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். அதிகம் செலவு செய்து சில விஷயங்களை முடிக்க வேண்டி வரும். ஆனால், உங்கள் ராசிக்கு 9ல் குரு அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.
பணப் புழக்கம் அதிகரிக்கும். தந்தை வழியில் உதவிகளுண்டு. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் ஆதாயமுண்டு. வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதனான புதன் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்தாலும் அலுத்துக் கொள்ளாமல் முடித்துக் காட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். உங்களின் தன-பாக்யாதிபதியான சுக்கிரன் வலுவாக நிற்பதால் பழைய சொத்துகளை விற்பதன் மூலமாகவோ, பாகப் பிரிவினை மூலமாகவோ பணம் வரும்.
விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். லாப வீட்டில் சூரியன் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! கட்சியின் மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் பாருங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாணவர்களே! விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.
வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவது குறித்து நம்பிக்கைக்குரியவர்களை கலந் தாலோசிப்பீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடிவரும். கலைத்துறையினரே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். விவசாயிகளே! உங்களின் கோரிக்கைகள் பூர்த்தியாகும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பழங்கதை பேசுவதைத் தவிர்த்து புதிய முயற்சியில் தீவிரம் காட்ட வேண்டிய மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 17, 18, 19, 20, 22, 26, 28, 29, 31 ஆகஸ்ட் 4, 5, 6, 7, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:கஸ்ட் 8, 9 மற்றும் 10ந் தேதி மாலை 3 மணி வரை யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.
பரிகாரம்:சென்னை-திருவள்ளூர் பாதையில் வேப்பம்பட்டு எனும் தலத்தில் அருள்பாலிக்கும் காளஹஸ்தீஸ்வரரை தரிசித்து வாருங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.
துலாம்:எந்த வேலையில் ஈடுபட்டாலும் முறைப்படி அதை முழுமையாகச் செய்து முடிக்கும் நீங்கள், நல்லது கெட்டது தெரிந்து செயல்படக்கூடியவர்கள். உங்கள் ராசி நாதனான சுக்கிரன் 28ந் தேதி வரை 8ம் வீட்டிலேயே மறைந்து நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவினங்களும் இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். குறிப்பாக பண விஷயத்தில் கவனமாக இருங்கள். 29ந் தேதி முதல் சுக்கிரன் 9ல் அமர்வதால் தடைபட்ட வேலைகள் உடனே முடியும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் நிலவிய கருத்து மோதல்கள் விலகும். உங்கள் பாக்யாதிபதியான புதன் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும்.
நல்ல வேலை கிடைக்கும். தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். சூரியன் 10ம் வீட்டில் நிற்பதால் புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குரு 8ல் நிற்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். இரவல் பெறவும் வேண்டாம். ஏழரைச் சனி நடைபெற்று கொண்டிருப்பதால் முக்கியமான வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே மேற்கொள்வது நல்லது. செவ்வாயும் மறைந்து நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும்.
சொத்து வாங்குவதற்கு முன்பு தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் உள்மனதில் ஒரு பயம், பதட்டம், சின்னச் சின்ன போராட்டம்வந்துபோகும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். உயர்கல்வியை போராடி முடிப்பீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல், தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். ஏற்றுமதி, பிளாஸ்டிக், தானியம் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். விவசாயிகளே! வண்டு பூச்சித் தொல்லை வந்து போகும். எதிர் நீச்சல் போட்டு இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது..
ராசியான தேதிகள்:ஜூலை 21, 22, 23, 28, 29, 30, 31 ஆகஸ்ட் 2, 6, 7, 8, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:ஜூலை 16ந் தேதி இரவு 7:30 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 10ந் தேதி மாலை 3 மணி முதல் 11, 12 ஆகிய தினங்களில் எதிலும் அவசரப்பட வேண்டாம்.
பரிகாரம்:கும்பகோணம், பாபநாசத்திற்கு அருகேயுள்ள திருப்புள்ளமங்கை துர்க்கையை தரிசியுங்கள். கோயிலில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.
விருச்சிகம்விருச்சிகம்:எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள் முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதி குருபகவான் 7ம் வீட்டில் நின்று உங்கள் ராசியை பார்ப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் வரும்.
கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் நீங்கும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் சமயோசித புத்தியுடன் பேசி பழைய சிக்கல்களுக்கு புதிய தீர்வைக் காண்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும். 9ல் சூரியன் நிற்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். சேமிப்புகளும் கொஞ்சம் கரையும். உங்கள் ராசிக்குள் ராகு நிற்பதுடன் ராசிநாதனான செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். சில நேரங்களில் அடிவயிற்றில் வலி, முதுகு வலி என்று வந்துபோகும். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.
ஊர்ப் பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். அரசியல்வாதிகளே! மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள்.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். பால், குளிர் பானங்கள், பேக்கரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். சூரியன் 9ல் நிற்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். இட மாற்றம் வரும். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 19, 20, 22, 23, 24, 25, 30, 31 ஆகஸ்ட் 1, 2, 3, 8, 9, 11.
சந்திராஷ்டம தினங்கள்:ஜூலை 16ந் தேதி இரவு 7:30 மணி முதல் 17, 18 ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15ந் தேதி மதியம் 1 மணி வரை நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்:சென்னை- ஊத்துக்கோட்டைக்கு அருகேயுள்ள சுருட்டப்பள்ளியில் அருளும் தாம்பத்ய தட்சிணா மூர்த்தியை தரிசித்து வாருங்கள். விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்.
தனுசுதனுசு:வாதம், விவாதத்தை விரும்பாத நீங்கள், பெரிய மனிதர்களின் தவறுகளை, ரகசியங்களை அம்பலப்படுத்துவதில் வல்லவர்கள். 28ந் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் செலவினங்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும். வாகனமும் அடிக்கடி பழுதாகும். தவிர்க்க முடியாத பயணங்களும் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகளும் உண்டு. 29ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் அது முதல் வேலைச்சுமை குறையும். வாகனப் பழுது சரியாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணம் வரும். மனைவி வழியில் இருந்து வந்த அலைச்சல் நீங்கும்.
வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சூரியன் 8ல் மறைந்து நிற்பதால் பயணங்கள் தொடரும். தந்தையாருக்கு அலைச்சல் இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் வலுவடைந்திருப்பதால் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு இருந்து வந்த பிடிவாத குணம் நீங்கும். சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடியும். சனி 10ல் நிற்பதால் பெரிய பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதனான குரு, கேதுவுடன் சேர்ந்து 6ல் மறைந்திருப்பதால் அவ்வப்போது வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். எலக்ட்ரானிக் சாதனங்கள், மின்சாதனங்கள் பழுதாகும். வீடுமாறவேண்டும் என நினைப்பீர்கள். தாயாருடன் மனக் கசப்பு வரும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவு கிட்டும். ஹார்மோன் கோளாறு, காது வலி வந்து நீங்கும். மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். ரியல் எஸ்டேட், இரும்பு, சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். முற்பகுதியில் தடுமாறினாலும் பிற்பகுதியில் முன்னேறும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 16, 18, 23, 24, 25, 26, 27 ஆகஸ்ட் 2, 3, 5, 12, 13, 14
சந்திராஷ்டம தினங்கள்:ஜூலை 19, 20, 21ந் தேதி மதியம் 1 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 15ந் தேதி மதியம் 1 மணி முதல் 16 ஆகிய நாட்களில் மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும்.
பரிகாரம்:சென்னை-மயிலாப்பூர் ஷீரடி சாய்பாபா ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசியுங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று முடிந்தவரை உதவுங்கள்.
மகரம்மகரம்:கரடு முரடான பாதையை தேர்ந்தெடுத்துப் பயணிக்கும் நீங்கள், பல விஷயங்களில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுவீர்கள். உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகையும் கைக்கு வரும். உயர்ரக ஆபரணங்கள் வந்து சேரும். அக்கம் பக்கத்தில் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திரும்பக் கொடுத்து கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். 28ந் தேதி வரை சுக்கிரன் வலுவாக நிற்பதால் உயர்ரக மின்சார சாதனங்கள், கம்ப்யூட்டர் வாங்குவீர்கள். ஆனால் 29ந் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைவதால் வாகன விபத்து, வாகனப் பழுது வந்து போகும்.
மனைவியுடன் கருத்து மோதல் வரும். உறவினர்களில் ஒரு சிலரின் இரட்டை வேடத்தைப் பார்த்து வேதனைப்படுவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 7ல் சூரியன் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் கோபப்படாதீர்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். மனைவி வழியில் அலைச்சல், செலவு இருக்கும். புதன் ஆகஸ்ட் 2ந் தேதி வரை 6ல் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் உங்கள் நட்பு வட்டம் விரியும். வெளி மாநிலத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். ஆனால் ஆதாயத்திற்காக பழகியவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 3ந் தேதி முதல் புதன் 7ல் அமர்வதால் பெரிய பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தந்தை வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.
கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள். கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். மாணவர்
களே! விளையாட்டு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள்.
புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாகன உதிரி பாகங்கள், கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். மேலதிகாரி அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே! சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். விவசாயிகளே! மகசூல் இரட்டிப்பாகும். மீதிப்பணம் தந்து பக்கத்து நிலத்தை கிரயம் செய்வீர்கள். வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதை உணரும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 17, 18, 19, 20, 27, 28, 29, 30, 31 ஆகஸ்ட் 6, 7, 9, 12, 13, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:ஜூலை 21ந் தேதி மதியம் 1 மணி முதல் 22 மற்றும் 23ந் தேதி மாலை 6 மணி வரை பொறுமையுடன் செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்:திருச்சிக்கு அருகேயுள்ள குணசீலம் பெருமாளை தரிசித்து வாருங்கள். புற்றுநோயாளிகளுக்கு உதவுங்கள்.
கும்பம்கும்பம்:மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நீங்கள், தன் குடும்ப நலன்களை விட தன்னைச் சார்ந்திருப்போரின் விவகாரத்தில் அக்கறை காட்டுவீர்கள். கடந்த ஒரு மாதகாலமாக 5ம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களை அலைக்கழித்த சூரியன் இப்போது 6ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கோபம் குறையும். பயம் விலகும். அரைகுறையாக நின்ற பல காரியங்கள் உடனே முடியும். அரசால் ஆதாயம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி புதன் 2ந் தேதி வரை வலுவாக நிற்பதால் பிள்ளை பாக்யம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 3ந் தேதி முதல் புதன் 6ல் மறைவதால் உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்துபோகும்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். அப்ரூவலுக்கு அனுப்பியிருந்த கட்டட மாதிரி வரை படத்திற்கு அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும். வங்கிக்கடன் கிட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் எட்டில் மறைந்து அஷ்டமத்துச் சனியாக நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். முதுகு வலி, மூட்டு வலி வந்து போகும்.
அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. 8ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் மனக்கசப்புகளும் பகையும் வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 4ல் குரு தொடர்வதால் குடும்பத்தில் வீண் சந்தேகமும் செலவுகளும் ஏற்படும். சிறுசிறு விபத்துகள் ஏற்படும். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப் படுத்துங்கள். பழைய தோழிகள் உதவுவார்கள். மாணவர்களே! மறதி, மந்தம் வந்து விலகும். ஆசிரியர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
வியாபாரம் சுமார்தான். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடி பெறுவீர்கள். அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் ஏதேனும் குறை கூறுவார்கள். உத்யோகத்தில் உங்களின் சக ஊழியர்களால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். கிசுகிசுத் தொந்தரவுகளும் வரக்கூடும். விவசாயிகளே! வாய்க்கால் வரப்புச் சண்டை வந்து நீங்கும். காய்கறி, பயிறு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வெற்றியின் விளிம்பை தொடும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 19, 20, 21, 22, 28, 29, 30, 31 ஆகஸ்ட் 1, 2, 6, 7, 8, 9, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:ஜூலை 23ந் தேதி மாலை 6 மணி முதல் 24, 25 ஆகிய தினங்களில் யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள்.
பரிகாரம்:காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசித்து வாருங்கள். பார்வையற்றவருக்கு உதவுங்கள்.
மீனம்மீனம்:நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாகக் கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களை கைத்தூக்கி விடுவீர்கள். உங்கள் ராசிநாதனான குரு 3ல் முடங்கிக் கிடப்பதால் சில நேரங்களில் எதிலுமே ஆர்வமில்லாமல் இருப்பீர்கள். முதல் முயற்சியிலேயே எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திணறுவீர்கள். உங்கள் திறமை மீது உங்களுக்கு சந்தேகம் வரும். கேது வலுவாக இருப்பதால் புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். ஆன்மிகவாதிகள் உதவுவார்கள். இரட்டை வேடம் போட்டவர்களை ஒதுக்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் சாதுர்யமான பேச்சால் பழைய சச்சரவுகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.
எதிர்பார்த்த பணம் மொத்தமாக வராவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். தாய்வழி உறவினர்கள் உங்களின் புதிய திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். சூரியன் 5ல் நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொந்த ஊரில் நடைபெறும் பொது விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சொத்துப் பிரச்னைகளை உணர்ச்சிபூர்வமாக அணுக வேண்டாம். சுக்கிரன் வலுவாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்றவை நல்ல விதத்தில் முடியும். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள். வாகனம் வாங்குவீர்கள். 7ம் வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்து நிற்பதால் மனைவிக்கு சோர்வு, களைப்பு, சிறு விபத்துகள் வந்து செல்லும்.
எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவே, நாவடக்கம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் திருமணமாக கைகூடும். பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். மாணவர்களே! கொஞ்சம் செலவு செய்து போராடி நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேருவீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடைக்கே வருவார்கள்.
பங்குதாரர்களை விட்டுப் பிடியுங்கள். கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள். புரோக்கரேஜ், ஹோட்டல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளுடன் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விவசாயிகளே! சொத்துப் பிரச்னைகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். எலித்தொல்லை, பூச்சித் தொல்லைகள் வரக்கூடும். வற்றிய கிணறு சுரக்கும். அதிரடி முடிவுகளால் முன்னேறும் மாதமிது.
.ராசியான தேதிகள்:ஜூலை 18, 19, 22, 23, 24, 30, 31 ஆகஸ்ட் 1, 2, 4, 8, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் வீண் வாக்குவாதம் வந்து போகும்.
பரிகாரம்:கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடியில் அருள்பாலிக்கும் பிரத்யங்கராதேவியை தரிசித்து வாருங்கள். தாயை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவுங்கள்.

No comments:
Post a Comment