Pages

Thursday, 19 July 2012

ஆயிரம் கண்ணுடையாள்!

ஆயிரம் கண்ணுடையாள்!

தெய்வத்தின் திருநாமங்களை வரிசைப்படுத்தி அர்ச்சிப்பது அர்ச்சனை. இதில் அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்களைக் கூறுவது லலிதா சகஸ்ரநாமம். அதில் சகஸ்ராக்ஷி என்ற திருநாமம் உண்டு. இதற்கு ஆயிரம் கண் கொண்டவள் என்று பொருள். கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், கண்ணுடைய நாயகி, கண்ணாயிரத்தாள்
 என்று அம்பாளைக் குறிப்பிடுவது இதனால் தான்,அம்பாளுக்கு தனி விழா.
         ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் கைலாயம் வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அங்கிருந்தாள். அவளது காவலை மீறி உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான். சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார். அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம்பெற்றுள்ளது. தன்னுடைய வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே ஆடி என்ற பெயர் ஏற்பட்டது. அந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டைமேற்கொண்டால்அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள்.
தோஷம் போக்கும் ஆடிவெள்ளி:
 ஆடிவெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனையும், முருகனையும் வேண்டி சுக்கிரவார விரதம் மேற்கொள்வர். நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி அம்மன், முருகனை வழிபடவேண்டும். கன்னிப்பெண்கள் இந்த விரதம் மேற்கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும். சுக்கிரதோஷம் காரணமாக பிரிந்திருக்கும் தம்பதிகள், இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,மீண்டும் சேர்வர்.
ஆடி செவ்வாய், வெள்ளி:
 ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் விசேஷமானவை. அன்றைய தினம் இல்லத்தின் வாசலில் கோலமிட்டு பூஜை அறையில் குத்து விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடி தேவியை வணங்குவது நன்மை தரும். பால் பாயசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவளித்து, அவர்களுக்கு மங்களப் பொருட்களைக் கொடுத்து சிறப்பிக்க, தேவியின் அருள் கிடைக்கும்.
நாகபூஜை:
ஆடி வெள்ளியில், புற்றுள்ள அம்மன் கோயில்களுக்குச் சென்று நாக தேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வது தோஷங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை. நவசக்தி அர்ச்சனை, சண்டி ஹோமம் போன்றவையும் செய்வார்கள்.
Key word;ஆயிரம் கண்ணுடையாள்,தோஷம் போக்கும் ஆடிவெள்ளி,ஆடி செவ்வாய்வெள்ளி,நாகபூஜை.

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads