Pages

Wednesday, 4 July 2012

தவலை அடை

தவலை அடை:













தேவையான பொருட்களை
  • துவரம் பருப்பு - அரை கப்,
  • உளுந்து - அரை கப்,
  • பயத்தம் பருப்பு - அரை கப்,
  • கடலைப் பருப்பு - அரை கப்,
  • புழுங்கல் அரிசி - அரை கப்,
  • சிவப்பு மிளகாய் - 5,
  • பச்சை மிளகாய் - 6,
  • பெருங்காயம் - சிறிது,
  • இஞ்சி - சிறிய துண்டு,
  • கொத்தமல்லி - சிறிது,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • தேங்காய்த் துருவல் - அரை கப்,
  • கடுகு - தாளிக்க,
  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செயல்முறை விளக்கம்:
 துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, புழுங்கல் அரிசியை ஊற வைக்கவும். பயத்தம் பருப்பையும், உளுத்தம் பருப்பையும் தனியே ஊற வைக்கவும். எல்லாவற்றையும் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். தேங்காய்த் துருவல், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். கடுகு தாளித்துக் கொட்டவும்.
இந்த மாவை சின்னச் சின்ன மெல்லிய வடைகளாகத் தட்டி, ஒரு சூடான தோசைக் கல்லில் இரண்டு புறமும் சிறிது எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வாட்டி எடுக்கவும். விருப்பப்பட்டால் எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்.
Key word:தவலை அடை

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads