Pages

Sunday, 29 July 2012

விடுகதைகள்

விடுகதைகள்:பாகம்-1

1. முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே
பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?
   
2. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில்
வரமாட்டான். அவன் யார்?   
   
3. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன்
இன்னொருவன். அது என்ன?
   
4. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது
என்ன?   
   
5. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான்.
அவன் யார்?
   
6. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு
உகந்தவன். அவன் யார்?
   
7. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான்.
அவன் யார்?   
8. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக்
கொண்டிருப்பான். அவன் யார்?
   
9. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல்,
அது என்ன?
   
10. கழற்றிய சட்டையை மறுபடியும் போட
மாட்டான். அவன் யார்?
விடைகள்:-   
1. வெண்டைக்காய்
2. நிழல்
3. கடிதம்
4. மிளகாய்
5. கண்ணீர்
6. காற்று
7. பென்சில்
8. பூமி
9. முட்டை
10. பாம்பு
விடுகதைகள்-பாகம்-2

1) செய்வதைச் செய்வான்; சொன்னதைச் செய்யான்.
– அவன் யார்?

2) பிறக்கும் போது வால் உண்டு; இறக்கும் போது
வால் இல்லை. – அது என்ன?

3) பச்சை கதவு, வெள்ளை ஜன்னல், திறந்தால்
கருப்பு ராஜா – அது என்ன?

4) கையிலே அடங்குவார்; கதை நூறு சொல்லுவார்.
– அது என்ன?

5) ஒரு கிணற்றில் ஓரே தவளை! – அது என்ன?

 6) ஒட்டுத் திண்ணையில் தடுக்குப் போட்டேன், திருப்பி
எடுக்கத்தான் முடியவில்லை – அது என்ன?

7) ஒரு கரண்டி மாவே ஊருக்கெல்லாம் தோசை – அது என்ன?

8) ஒரு கால், நான்கு கீத்து, ஒரு பந்தல் – இது என்ன?

9) ஒரு குளத்தில் ஒரு தட்டு, நனையாமல்கிடக்கிது,
மூழ்கவும் இல்லை – இது என்ன?

10) ஒரு சாண் கட்டைக்கு அரைச்சாண் மூடி – அது என்ன?
விடைகள்:
1) கண்ணாடி
2) தவளை
3) சீத்தாபழம்
4) புத்தகம்
5) வாய்,நாக்கு
6. கோலம்
7. நிலா
8. அரைக் கீரை
9. தாமரை இலை
10. பேனா
விடுகதைகள்-பாகம்-3 

1) ஒருவரை ஒருவர் இவர்கள் அடித்துக் கொள்வார்கள்,
ஆனாலும் தகராறே கிடையாது, அவ்வளவு
நெருங்கியவர்கள் – இவர்கள் யார்?

2) ஒருவரை ஒருவர் துரத்திப் பிடிப்பதில் இவர்களுக்குள்
பெரிய போட்டி, காலக் கணக்கைக் காட்டுவதில்
இவர்கள் மிக வல்லவர்கள் – யார் இவர்கள்?

3) ஒரு சிறிய குளம், அதைச் சுற்றிலும் அழகான ஐந்து
வீடுகள் – இது என்ன?

4) ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமிதான் ! – இது என்ன?

5) ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டைகள், ஒன்று
குறைந்தாலும் அவளுக்கு துன்பம்தான் – இது என்ன?
 6) காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும்
- அது என்ன?

7) ஊரில்லா மாநிலங்கள், தண்ணீர் இல்லா கடல்கள்
-அது என்ன?

8) பகலில் உறங்குவான், இரவில் அலறுவான்
-அவன் யார்?

9) நடைக்கு உவமை ஆனாள், நளனுக்கு தூது போனாள்
- அவள்யார்?

10) பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான்,
வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்
-அவன் யார்?

விடைகள்:-
1) கண் இமைகள்
2) கடிகாரத்தின் முட்கள்
3) உள்ளங்கை, ஐந்து விரல்கள்
4) வெள்ளைப் பூண்டு
5) அடுப்பு
6) புல்லாங்குழல்
7) தேச வரைபடம்
8) ஆந்தை
9) அன்னம்
10) நகம்
விடுகதைகள்-பாகம்-4
 
1) மாலையிலே சாலையிலே மலரும் பூ, காலையில்
வெளிச்சம் வந்தால் கண் மூடும் பூ – அது என்ன பூ?

2) நாலு குழித்தட்டு இட்லித்தட்டுமல்ல,
நல்ல இரும்புத் தட்டு பணீயாரச் சட்டியுமில்லை
போரிலே வீரனைக் காக்கும் கவசமுமல்ல -அது என்ன?

3) சீமையிலே செஞ்ச சின்னதுரை, சின்ன மாளிகைக்ககு
நல்ல காவல்காரனாம் – அவன் யார்?

4)  செய்ததைச் செய்யும் குரங்கும் அல்ல
சிங்காரிக்க உதவும் சீப்புமல்ல – அது என்ன?

5) வயிறு நிறையச் சாப்பிட்டால், வானத்தில் பறப்பான்
- அவன் யார்?

  6) தொப்பை பையனுக்கு ஒரு வாசல், தோழனுக்கு
இரு வாசல் – அவன் யார்?

7) மரத்துக்கு மரம் தாவும் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?

8) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி
வரும் பந்தும் அல்ல – அது என்ன?

9) உழைப்பில் மலரும் பூ, உடனடி உலரும் பூ – அது என்ன?

10) காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா
மயங்கிக் கிடக்குது – அது என்ன?

விடைகள்
1) தெரு விளக்கு
2) கேடயம்
3) பூட்டு
4) கண்ணாடி
5) பலூன்
6) சட்டை
7) அணில்
8) கடல்
9) வியர்வை
10) முட்டை
விடுகதைகள்-பாகம்-5


1) கடித்தால் துவர்ப்பு, தண்ணீர் குடித்தால் இனிப்பு -
அது என்ன?

2) கனத்த பெட்டி, கதவைத் திறந்தால் மூட முடியாது -
அது என்ன?

3) கொடுக்க முடியும், எடுக்க முடியாது – அது என்ன?

4) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து – அது என்ன?

5) எலும்பில்லாத மனிதன், கிளையில்லாத மரத்தில்
ஏறுவான் – அது என்ன?
6) பறிக்க பறிக்கப் பெரிதாகிறது – அது என்ன?

7) உமி போல் பூ பூக்கும், சிமிழ் போல் காய்
காக்கும் – அது என்ன?

8) பச்சைப்புல்லில்  துவண்டு வரும், பவளம் போல்
உருண்டு வரும் – அது என்ன?
9) பால் இல்லாமலே பருக்கிறது, நோய் இல்லாமல்
இளைக்கிறது, அது என்ன?

10) நாக்கு இல்லாதவன் நல்லது சொல்வான்- அது என்ன?

விடைகள்:
1) நெல்லக்கனி
2) தேங்காய்
3 )கல்வி
4) கண்
5) பேன்
6) குழி
7) நெல்லிக்காய்
8) பனித்துளி
9) சந்திரன்
10) புத்தகம்
விடுகதைகள்-பாகம்-6

 
1) தண்ணீரிலே துள்ளாட்டம்
, தரையிலே தள்ளாட்டம் -
அது என்ன?

2) அந்தரத்தில் பறக்கும் பறவையல்ல
அந்திக்குப் பின் இரைதேடும் ஆந்தையல்ல
தலைகீழாய் நின்றிருக்கும் தவசியுமல்ல
அது என்ன?

3) செவி இல்லாத செவிடன் செகம் பூராவும் திரிகிறான்.
கால் இல்லாத கபடன் காடும் மேடும் போகிறான் -
அவன் யார்?

4) கொண்டையிலே பூ உண்டு, எடுக்க நாதியில்லை
குதிகாலில் முள் உண்டு, பிடுங்க நாதியில்லை – அது என்ன?

5) எட்டு கால் ஊன்றி, இரு கால் படமெடுத்து வட்டக்குடை
பிடித்து வருகின்ற அழகினைப் பார் – அது என்ன?
விடைகள்:-
1) மீன்
2) வௌவால்
3) பாம்பு
4) சேவல்
5.)நண்டு

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads