Pages

Thursday 12 July 2012

குறைந்த செலவில்-விண்வெளி சுற்றுலா

""குறைந்த செலவில், விண்வெளி சுற்றுலா மற்றும் விண்வெளியில் பெரிய அளவில், சூரிய ஆற்றல் செயற்கைக்கோளை நிறுவ, தீவிர
 முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்,'' என, விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.
  
டில்லி, டி.ஆர்.டி.ஓ., வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரி, விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறியதாவது: விண்வெளி ஆய்வு பயணத்துக்கு தற்போது, அதிக பணம் செலவிடப்படுகிறது. இதைக் குறைக்க, நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ஒலியை விட, 25 மடங்கு வேகமாக செல்லக் கூடிய திறன் கொண்டது, "ஹைப்பர் பிளேன்!' இத்திட்டத்தைச் செயல்படுத்த, முயன்று வருகிறோம். விண்வெளி சுற்றுலா பயணத்துக்கு, தற்போது, ஐந்து கோடியே, 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது; குறைக்க, ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம். சந்திரனில், ஹீலியம் 3 ஆற்றல், அதிகம் உள்ளது. எதிர்காலத்தில், விண்வெளி ஆய்வு, மிகவும் சுவாரசியமாக இருக்கும். வேகம் மற்றும் குறி தவறாமல் இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட, ஹைப்பர்சானிக் தொழில்நுட்பம், முக்கிய இடத்தைப் பிடிக்கும். இந்திய அறிவியல் கழகம், ஐ.ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, இத்தொழில் நுட்பத்தை, வரும் ஐந்து ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

1 comment:

ADVERTISE HERE.

space for ads