Pages

Friday, 6 July 2012

ஹாலிவுட்டில் களமிறங்குகிறேன்-கமல்

  ஹாலிவுட்டில் களமிறங்குகிறேன்-கமல்:


ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், அந்த படத்தை இயக்குகிறேன்.
அதற்கான வேலைகள் நடக்கின்றன," என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்ஹாஸன். சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா நடைபெறுகிறது (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டக் காட்சியுடன் சில ஆக்ஷன் காட்சிகளும் திரையிடப்பட்டன. இதே விழாவில் லார்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்து கொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர். விழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாஸன் நிருபர்களிடம் பேசியது: எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் மூலம் ஹாலிவுட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன். இவர் ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்தவர் 'மேட்ரிக்ஸ்', `லாட் ஆப் தி ரிங்ஸ்', 'கிரேட் கேட்ஸ்பி' ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார். நானும், அவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தபோது அவரிடம் நான் 9 கதைகளை சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும், எனவே இந்த கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads