ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க இஸ்ரோ திட்டம்:
அடுத்த 5 ஆண்டுகளில் 60 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாகவும்,
அதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித்தளத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க இருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய ராதாகிருஷ்ணன், ‘அடுத்த 24 மாதங்களில் நமது தொலை தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் அடங்கிய 24 ராக்கெட்டுகளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதுபோல அடுத்த 5 ஆண்டுகளில் 60 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். அதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள் தவிர சந்திராயன்-2ஐ ஏவும் திட்டமும் உள்ளதாகவும், மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் இஸ்ரோவின் திட்டம் தற்போது ஆய்வு நிலையிலேயே உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment