Pages

Sunday, 15 July 2012

7 வயது சிறுமியை தேடும் கமல்

7 வயது சிறுமியை தேடும் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக ஹாலிவுட்டில் இயக்கி-நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிப்புத் திறமையுடன் கூடிய 7 வயது சிறுமியை தேடி
 வருகிறார். ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு, அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் கேரக்டரும். எனவே படம் முழுக்க கமல்ஹாசனுடன் இந்தக் குழந்தை கேரக்டரும் கூடவே வருமாம்.
இதுகுறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், பார்க்க அழகாக இருந்தால் மட்டும் பத்தாது, நன்கு நடிக்கவும் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட சிறுமியைத்தான் தேடி வருகிறோம். நான்கூட 7 வயதில்தான் நடிக்க வந்தேன். எனவே அந்த வயதில் ஒரு குழந்தை எப்படி இருக்கும், எப்படி உணரும் என்பது எனக்குத் தெரியும். எனவே 7 வயது குழந்தையுடன் இணைந்து நடிப்பது என்பதை ரொம்பவே ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன், என்று கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads