Pages

Wednesday, 27 June 2012

சூரிய மின்சக்தி மூலம் இலவச மின் இணைப்பு

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சியில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் பெறும் திட்டத்தின்கீழ், டில்லி மிண்டா நெக்ஸ் ஜென் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூலம், ஒரு மினி கிரிட் அமைத்து, 240 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு,
வீட்டிற்கு இரண்டு எல்.இ.டி., பல்பு, 1 சார்ஜர் என்ற விகிதத்தில், 35 வீடுகளுக்கு சூரிய ஒளி மின்திட்டத்தின்கீழ் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி பேனல் மற்றும் பாட்டரி, அய்யனடைப்பு ஊராட்சி கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டு, அதிலிருந்து 35 வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்விளக்குகள் அனைத்தும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 11.30 மணிவரை தானியங்கியாக எரியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் ஆஷிஷ்குமார், திட்ட இயக்குனர் பெல்லா, அந்த வீடுகளுக்கு நேரில் சென்றுபார்த்து, சூரிய ஒளி விளக்குகளின் நன்மைகள் குறித்துகேட்டறிந்தனர்.

Key word:சூரிய ஒளி மின் இணைப்பு

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads