வாழ்வை வசீகரமாக்கும் லேம்ப் ஷேடு!
சிறிய வீடாக இருந்தாலும், ஒரு சின்ன விளக்கொளி போதும்... அதை அழகாக்க! வெறுமனே ஒரு பல்பை எரிய விடுவதற்குப் பதில், குட்டியாக, அழகாக ஒரு லேம்ப் ஷேடு வைத்து, அதனுள்ளிருந்து வீட்டுக்குள் வெளிச்சம் பரவும்படி செய்தால் வீடே வசீகரமாகும்.
புதுச்சேரி ஹேமலதா விதம்விதமான லேம்ப் ஷேடுகள் செய்வதில் நிபுணி. ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த சற்றே விலை அதிகமான மாடல்களிலும், அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி குறைந்த முதலீட்டிலும் லேம்ப் ஷேடுகள் செய்யலாம்’’ என்கிற ஹேமலதா, ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘ஹேண்ட் மேடு பேப்பர் (கொஞ்சம் காஸ்ட்லியானாலும் ஹேண்ட் மேடு பேப்பர்தான் அழகு. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது) அல்லது சார்ட் பேப்பர், மூங்கில் குச்சிகள், தடிமனான, மெல்லிசான நூல், எலெக்ட்ரிக் ஒயர், பல்பு ஹோல்டர், 2 பின் பிளக், பல்பு, பசை... மொத்த முதலீடு ஆயிரம் ரூபாய் போதுமானது.’’
எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘சதுரம், வட்டம்னு விருப்பமான ஷேப் மற்றும் மாடல்கள்ல பண்ணலாம். ஆரிகமினு சொல்ற பேப்பர் மடிப்பு ஸ்டைல்லயும் பண்ணலாம். சுவர்ல
மாட்டற மாடல் அல்லது தொங்க விடற மாடல்னு ரெண்டு விதமாவும் பண்ணலாம். வீட்டின் வரவேற்பறை, படுக்கையறைன்னு எங்க வச்சாலும்
அழகு.’’
ஒரு நாளைக்கு எத்தனை? விற்பனை வாய்ப்பு?
‘‘ஒரு நாளைக்கு 6 லேம்ப் ஷேடு பண்ணலாம். பண்டிகை, கல்யாணம், பிறந்த நாள், கிரகப்பிரவேசம்னு எதுக்கு வேணாலும் அன்பளிப்பா கொடுக்கலாம். ஒரு லேம்ப் ஷேடு பண்ண அடக்க விலை ரூ.150 முதல் 200 வரை ஆகும். அதை 350 முதல் 500 ரூபாய் வரை விற்கலாம்.’’
பயிற்சி?
‘‘சென்னை அல்லது புதுச்சேரில ஒருநாள் பயிற்சி... சாதாரண மாடல் கத்துக்க மெட்டீரியலோட சேர்த்துக் கட்டணம் 350 ரூபாய். ஆரிகமி மாடலுக்கு 500 ரூபாய்.’’
பிரதி எடுக்க

No comments:
Post a Comment