மல்லிகைப் பூக்களின் மருத்துவக் குணங்கள்.
மண மணக்கும் மல்லிகை பூக்களையும், மல்லிகை செடிகளையும் அறியாதவர்கள் இருக்க முடியாது. மல்லிகை மலர்கள் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. தமிழகம் முழுவதும் மல்லிகை பயிர் செய்யப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கிறார்கள்.
மல்லிகைப் பூக்கள் குடல் புழுக்களை வெளியேற்றும். வீக்கத்தைக் கரைத்து குணப்படுத்தும். சிறுநீரை பெருக்கும். மாதவிடாயை தூண்டும். தலை நோய், உடல் வெப்பம், கண் நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
தாய்மார்கள் பால் சுரப்பை நிறுத்த மல்லிகைப் பூக்கள் உதவுகின்றன. நன்றாக மலர்ந்த 20 மல்லிகைப்பூக்களை பால் ஊட்டும் தாய்களின் மார்பில் வைத்துக் கட்ட வேண்டும். தினமும் மாலையில் 3 நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால் பால் சுரப்பி நிற்கத் தொடங்கிவிடும். 20 பூக்களை அரைத்து மார்பகத்தின் மீது பூசி வரவும் செய்யலாம்.
தொடைப்புண் குணமாக மல்லிகைப் பூக்களை அரைத்து , புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும். காட்டு மல்லிகை, சாதி மல்லிகை, ஊசி மல்லிகை, குடமல்லிகை என்று மல்லியில் பல வகைகள் உள்ளன. இவைகளின் மருத்துவப் பயன்கள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் இருக்கும். காட்டு மல்லிகை இலைகளை அரைத்து பூசினால் வெண்குஷ்டம் கட்டுப்படும்.

No comments:
Post a Comment