Pages

Friday, 8 June 2012

பருப்பு தோசை

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு    -    150 கிராம்
துவரம்பருப்பு    -    100 கிராம்
உளுந்து    -    50 கிராம்
பாசிப்பருப்பு    -    50 கிராம்
அரிசி    -    கால் கிலோ
காய்ந்த மிளகாய்    -    6
சோம்பு    -    1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்    -    3
முருங்கைக்கீரை    -    1 கைப்பிடி
உப்பு    -    தேவையான அளவு
செய்முறை:பருப்பு வகைகளோடு அரிசியைச் சேர்த்து இரவு ஊற வையுங்கள். மறுநாள் காலை அதில் மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கீரையை காம்பில்லாமல் உருவி அதையும், வெங்காயத்தையும் மாவில் சேர்த்து உப்பு போட்டு கரைத்து தோசைக்கல்லில் ஊற்றி நடுத்தரப் பதத்தில் எடுங்கள். சத்தும் சுவையும் நிறைந்த பருப்பு தோசை மணக்கும்!

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads