Pages

Saturday, 23 June 2012

ஆவிகளை விரட்டும் மூலிகை

ஆழியாறு பண்ணையில் ஆவிகளை விரட்டும் மூலிகை விற்பனை:

  உலகின் மூத்த மொழியாகத் தமிழ்மொழியும், மூத்த குடிமக்களாகத் தமிழ் மக்களும் திகழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் நம் நாட்டிற்கு வருமுன்னரே சிறந்து விளங்கி வந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.
காடுகள், மலைகள், சமவெளிகளில் சுற்றித்திரிந்த ரிஷிகளும், சித்தர்களும் தங்களது ஞானத்திலும், அனுபவத்திலும் ஏராளமான கொடிய நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடித்தனர். எளிதில் கிடைக்கக்கூடிய பக்க விளைவுகளே இல்லாத
 சக்தி மிகுந்த மருந்துகளை மருத்துவ மூலிகைகள் என்றழைத்தனர்.
ஆங்கில மருத்துவமுறை நம் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் தமிழ் மருத்துவம் எனப்படும் மூலிகை மருந்துகளால் நோய்களை குணப்படுத்தும் முறை காலப்போக்கில் குறைய ஆரம்பித்தது. தமிழக வன மரபியல்துறை சார்பில் சிறியா நங்கை, பெரியா நங்கை, நில வேம்பு, தேக்கு சந்தனம், பேய் மிரட்டி உள்ளிட்ட சுமார் 400 வகையான மூலிகைகள் இங்கு வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நோய்களை பக்க விளைவுகளின்றி குணப்படுத்தும் தன்மை கொண்ட அரியவகை மூலிகைகள் குறித்து வன மரபியல் துறையினர் கூறியதாவது:-
பேய் மிரட்டி எனப்படும் மூலிகையின் இலையை பஞ்சுபோல் உருட்டி நல்லெண்ணையில் தீபம் போட்டால் நீண்ட நேரம் நின்று எரியும். அசுத்த ஆவிகள் விலகும். நோய்கள் தீரும். பாம்புக்கடி, நீரழிவு, சுவாசக் கோளாறு, கேன்சர், ஆஸ்துமா, தீக்காயம், பைத்தியம் உள்ளிட்ட நோய்களை தீர்க்கும்.
ஏராளமான மூலிகைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளுக்கும் தமிழ் மருத்துவ மூலிகைகள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Key word:ஆவிகளை விரட்டும் மூலிகை.       

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads