சிதம்பரம் :
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9.30மணியளவில் கோயில் கொடிமரத்தில் உத்சவ ஆச்சாரியார் ரத்னபூஷண தீட்சிதர் வேத மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க கொடியேற்றினார். தீபாராதனைக்கு பின்னர் பஞ்சமூர்த்திகள் பிரகாரங்களில் வீதியுலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.வருகின்ற 21ம் தேதி பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானாக வீதியுலாவும், 24ம் தேதி தங்கரதத்தில் பிச்சாண்டவராக வீதியுலாவும் வருகின்றனர். 25ம் தேதி தேர்த்திருவிழாவும், 26ல் ஆனித்திருமஞ்சன தரிசனவிழாவும் நடக்கிறது.

No comments:
Post a Comment