.கோடை சீசனில் களை கட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நுங்குகள்:
வேண்டுபவர்களுக்கு வேண்டியவனவெல்லாம் கொடுக்கின்ற ஓரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு.தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்து கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனைமரம்.
பல வகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனை மரத்தை கேட்டதை கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு நம் முன்னோர்கள் ஓப்பிடுவார்கள்.
ஆண் பனை மரம், பெண் பனை மரம் என இருவகைப் பனை மரங்கள் உள்ளன. இதில் பெண் மரத்தில் தான் நுங்குகள் காய்கின்றன.
தமிழ்நாட்டில் கோடை சீசனில்தான் பனை மரத்தில் அதிகமாக நுங்குகள் காய்த்து குலுங்குகின்றன.இந்த நுங்குகளில் பல அற்புதம் நிறைந்த மருத்துவ குணங்கள் உள்ளது. அதில் உள்ள சில ரகசியங்களை இதில் காண்போம்.
தமிழ்நாட்டில் கோடை வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். நுங்குகளில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமீன், போன்ற சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது.
கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவு பொருளாகும்.இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி, சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நுங்குகளை சாப்பிட்டால் உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு குணமடையலாம்.மேலும் இது குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். மஞ்சல் காமாலை,நீர்க்கட்டு,நீர் சுருக்கு, நீர் எரிச்சல் ஆகியவைகளையும் குணப்படுத்த வல்லது.
கோடையில் வேர்க்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வேர்க்குரு மறைந்துவிடும். ஓருசிலர் மேல்தோல் நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை. மேல்தோலுடன் நுங்கை சாப்பிட்டு வந்தால்தான் இரத்த அழுத்தம், சீதக்கழிசல் போன்ற நோய்கள் நீங்கும்.
தற்போது தஞ்சையில் வெயில் 98,101,104 டிகிரிகள் என கடுமையாக வீசி தஞ்சை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக மூப்பனார் சாலை, மாப்பிள்ளை நாயக்கன் பட்டி, துலுக்கப்பட்டி, புது பஸ் நிலையம் போன்ற பல இடங்களில் அமோகமாக நுங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொது மக்களும் வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளும் இந்த நுங்குகளை ரூ.10-க்கும் ரூ.20-க்கும் என்று வாங்கி விரும்பி ருசித்து சாப்பிட்டு வருகின்றனர். மேலும் நிறைய பேர் வீட்டிற்கு என்று தனியாக நுங்குகளை வாங்கிச் செல்கின்றனர். மாதாக்கோட்டை, சூரக்கோட்டை,விலார் ரோடு, பூண்டி, சாலிமங்களம், அம்மாபேட்டை, பூதலுர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை குடிக்காடு, கண்டிதம்பட்டு, கீழ வைத்தாச்சாவடி ஆகிய ஊர்களில் உள்ள பனை மரங்களில் இருந்து நுங்குகளை வெட்டி மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தஞ்சை மக்களுக்காக பனை தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
மேலும் இந்த நுங்குகள் கொண்டு வந்த 2-மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிடுகின்றன அந்த அளவுக்கு நுங்கு விற்பனை கடுமையாக சுடுபிடித்துள்ளது.
இதுகுறித்து நுங்கு வெட்டி விற்பனை செய்பவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது- நாங்கள் சூரக்கோட்டை, கீழவைத்தச்சாவடியில் உள்ள பனை மரத்தோட்டத்தில் இருந்து நுங்குகளை வெட்டி கொண்டு வந்து இங்கு விற்கிறோம். நுங்குகளை கொண்டு வருவதற்கு என்று தனியாக வாகனத்திற்கு மட்டும் ரூ.200 முதல் ரூ.400 வரை கொடுக்கிறோம்.
சராசரியாக 10-பனை மரத்தில் ஏறினால்தான் எங்களுக்கு போதுமான காய்கள் கிடைக்கிறது. பனை மரம் ஏறும் தொழிலாளிக்கு ஓரு பனை மரத்தில் ஏறுவதற்கு சராசரியாக ரூ.25 முதல் 50 ரூபாய் வரை கொடுக்கிறோம்.மேலும் ஓவ்வொரு நுங்கு குலைக்கும் காய்களை பொறுத்து பணம் கொடுக்கிறோம்.
இதில் சில குலைகள் பிஞ்சுகளாகவும் முற்றிய குலைகளாகவும் இருக்கும் இதனால் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையிலும்கூட நாங்கள் 8 நுங்கு சுளைகளை ரூ.10 என்றுதான் விற்கிறோம். இதில் எங்களுக்கு எந்த வித லாபமும் கிடைக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பனை மரத்தில் கிடைக்கும் பதநீரை பனை மர ஓலையில் ஊற்றி அதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும்கூட இந்த பானம் தாகத்தை தீர்த்து உடலுக்கு குளிமையை ஏற்படுத்தி வலிமையை சேர்க்கும் அளவுக்கு ஆற்றல் படைத்தது.
மேலும் இந்த பதநீரையும் நுங்கையும் கலந்து குடித்தால் முகத்தை அழகுற வைக்கவும் மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் கண் பார்வை அதிகரிக்கவும் செய்கிறது. சிறு குழந்தைகளுக்கு நுங்குகளை சிறிதாக நசுக்கி கொடுக்க வேண்டும் அப்போது தான் எளிதில் ஜீரணமாகும்.
சொல்லும்போதே நாக்கில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறதல்லவா. ஓரு பனையில் உள்ள நுங்கில் எவ்வளவு மருத்துவ ரகசியங்கள் அடங்கி இருக்கிறது என்று பார்த்தீர்களா உடனே இயற்கை தந்த வர பிரசாதத்தை உண்டு மகிழுங்கள்.
key word: பனை நுங்குகள்,மருத்துவம்

No comments:
Post a Comment