Pages

Friday, 1 June 2012

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே கட்டணம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொபைலில் பேசினால் ஒரே கட்டணம்

         "கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மொபைலில் பேசினாலும், ஒரே கட்டணத்தைக் கொண்டு வர அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். ரோமிங் கட்டணங்களை படிப்படியாகக் குறைத்து, நாடு முழுவதும் ஒரே மொபைல்போன் கட்டணத்தை அரசு கொண்டு வர முற்படும்' என, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கைக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் முக்கிய அம்சமே, நாடு முழுவதும் ஒரே தொலைபேசிக் கட்டணத்தை கொண்டு வருவது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய கபில்சிபல் கூறியதாவது:
         அமலுக்கு வருவது எப்போது? இந்த ஒரு கட்டணத் திட்டம் எப்பொழுது அமலுக்கு வரும் என்பது குறித்து, இப்போது ஒன்றும் கூற முடியாது. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே, இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். ஆனால், இந்தத் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு எல்லா வகைகளிலும் முயற்சி செய்யும். புதிய தொலை தொடர்புக் கொள்கையின் முக்கிய அம்சமே, குறைந்த கட்டணத்தில் தொலைபேசி வசதிகளை மக்களுக்கு அளிப்பது. கிராமப்புறங்களில் தொலைபேசி வசதிகளை தற்சமயம் 30 சதவிகித மக்களே பயன்படுத்துகின்றனர். இதை 2017ம் ஆண்டிற்குள் 70 சதவிகிதமாக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதையே 2020ம் ஆண்டிற்குள் 100 சதவிகிதமாக உயர்த்துவதுதான் அரசின் நோக்கம்.
         வசதி செய்து தரும்: உலகத் தரம் வாய்ந்த தொலை தொடர்பு சாதனங்களை, இந்தியாவில் தயாரிக்க அனைத்து வசதிகளையும் தொழில் முனைவோர்களுக்கு அரசு செய்து தரும். இந்த தொழிற்சாலைகள் இந்தியாவில் மேலும் மேலும் துவங்கும்போது, தொலை தொடர்புக் கட்டணங்கள் குறைவதற்கு வாய்ப்பு அதிகம். தொலை தொடர்பு "லைசென்ஸ்' அரசிடம் வாங்குவதற்கும், "ஸ்பெக்ட்ரம்' வழங்குவதற்கும் இனிமேல் தொடர்பு இருக்காது. "ஸ்பெக்ட்ரம்' வழங்குவதில் அரசு தாராளமய கொள்கையைப் பின்பற்றும். தொலை தொடர்பு அமைச்சகம் ஒரு ஸ்திரமான கொள்கையை வரும் பத்து ஆண்டுகளுக்கு அமல்படுத்தி, இந்த துறையில் தொழில்கள் முன்னேற வழி வகை செய்யும். இவ்வாறு கபில்சிபல் கூறினார்.
Key word:தொ.நுட்பம்



No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads