குரூப் 4 ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யலாம்.
திருச்சி : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை 2 நாட்களில் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் நட¢ராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 மற்றும் குரூப் 8 காலி பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அதன் தலைவர் நட்ராஜ் நேற்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்ட கலெக்டர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நட்ராஜ் அளித்த பேட்டி: குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் 244 இடங்களில் 5 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. 10,793 பணியிடங்களுக்காக 12.5 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 11 லட்சம் விண்ணப்பங்கள் வரை உறுதி செய்யப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை 2 நாட்களில் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்யலாம். அதிகளவாக நெல்லை மாவட்டத்தில் 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2வது இடத்தில் மதுரையும், கடைசி இடத்தில் திருப்பூரும் உள்ளன.
ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் மையங்கள் பதற்றம் உள்ளவையாக கருதப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்படும். இந்த மையங்கள் வெப் கேமராவினால் இணைக்கப்பட்டு கலெக்டர் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலகங்களிலிருந்து கண்காணிக்கப்படும். வினாத்தாள்களை பிரிக்கும்போதும், விடைத்தாள்களை சீல் வைக்கும்போதும் அனைத்து மையங்களிலும் கேமராவில் பதிவு செய்யப்படும். தேர்வு முடிந்த 40 நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்வு முடிந்தவுடன் இணையதளத்தில் விடைகள் வெளியிடப்படும். இதில் தவறுகள், சந்தேகங்கள் இருந்தால் ஒருவாரத்தில் தெரிவிக்கலாம். வேலை வாங்கித்தருவதாக கூறி யாராவது பணம் கேட்டால் என்னிடம் நேரில் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
Key word: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட்
No comments:
Post a Comment