Pages

Wednesday, 30 May 2012

நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி!

  மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி!
இந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.




  • செய்முறை: சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும், அதிக அழுத்தம் வேண்டாம் சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும், பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.
  • அமரும் முறை: ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம், மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும், மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம், தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரு கைகளிலும், ஒரே நேரத்தில் செய்யவும், சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும். சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம், மூச்சை அடக்குதல் கூடாது. குறைந்த பட்சம் 8 நிமிடங்கள், அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம். சராசரியாக பள்ளி மாணவர்கள் காலையில் 16 நிமிடங்கள், மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வது நல்லது.
  • பலன்கள்: மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது. மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும்.  உடலிலுள்ள அனைத்து செயல்களுக்குமே பிராண சக்தி அதிக அளவில் பாய்வதால் உடலில் உள்ள அசதி, சோர்வு, சோம்பேறித்தனம் ஆகியவை மறைந்து, உடலிலும் ஒரு புத்துணர்வு உருவாகும். உடல் , மூளை இரண்டின் செயல்திறணும் பல மடங்கு அதிகரிக்கும்.  உடலில் பிராண சக்தி அதிக அளவில் பாயும்போது, நாடிகளில் உள்ள சக்தித் தடைகள் அதிகரிக்கும்.  இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செயல்கள் சுறுசுறுப்படைந்தாலும் இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும். பிராண சக்தி அதிக அளவில் செல்லும்போதுதான் வலது மூளையின் பணிகளான, பேச்சுத்திறன், எழுத்துத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் அதிகரிக்கும்.நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பிராண முத்திரைக்கு உண்டு. பிராண முத்திரையைத் தொடர்ந்து செய்து நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.
    Key word: நினைவாற்றல்
     

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads