Pages

Wednesday, 30 May 2012

நல்லவர்களுடன் சேருங்கள்

தான் சேர்ந்திருக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப மணம், சுவை, நிறம் ஆகிய தன்மைகளை தண்ணீர் பெறுகிறது. அசுத்த நீருடன் சேரும்போது, அது அசுத்தமாகிறது. அதேபோல, உடன் பழகுபவர்களின் தன்மைக்கேற்பவே குணங்களும் அமையும். தீயவர்களுடன் சேர்வதால் தீமை உண்டாகுமே தவிர, வேறு நன்மைகள் ஏதும் ஏற்படாது. நல்ல குணமுடையவர்கள், தீயோர்களுடன் நட்பு கொள்ளாமல் விலகியே இருப்பர்.
ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.
Key word:திருவள்ளுவர்-ஆன்மிக சிந்தனைகள்.

1 comment:

  1. கூகுள்" தரும் தகவல் வகைப்படுத்தல் - http://mytamilpeople.blogspot.in/2012/05/google-introducing-knowledge-graph.html

    ReplyDelete

ADVERTISE HERE.

space for ads