Pages

Thursday, 31 May 2012

மதிப்பு மிக்க பொருள்

மதிப்பு மிக்க பொருள்:
  •  உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறுகின்றான். பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும். சோம்பல் ஒருவனை நரகத்திற்குத் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.
  • பொறாமை,ஆசை,சினம்,கடுஞ்சொல் இவற்றை அகற்றி வாழ்வதே அறவாழ்வாகும். தீயினால் சுட்ட புண்கூட நாளடைவில் ஆறிவிடும். ஆனால், நாவினால் சுட்ட வடு ஆறவே ஆறாது.
  • மதிப்பு இல்லாதவரையும் ஒரு பொருட்டாக மதிக்கச் செய்யும் தன்மை பொருள்வளத்திற்கு உண்டு. அப்பொருளைப் போல மதிப்புமிக்க பொருள் வேறொன்று உலகில் இல்லை.
  • எவ்வளவு கிடைத்தாலும் அடங்காத தன்மையுள்ள ஆசையை ஒருவன் அடக்கப் பழகி விட்டால், அப்போதே அவன் பிறப்பில்லாத பேரின்ப நிலையைப் பெறுகிறான்.
  • ஒழுக்கத்தினால் சிறப்பு உண்டாவதால் ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றி மதிப்பார்கள்.
  • தன்னை அகழ்ந்து பள்ளம் உண்டாக்குபவரையும் பொறுத்துக் கொண்டு நிற்கும் பூமியினைப் போல, தம்மை இகழ்ச்சியாக எண்ணுபவரையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். 
  •  பெருமையைத் தரும் பெரும் பொருளைப் பெறுவதாக இருந்தாலும், பிறருக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே சான்றோர்களின் கொள்கையாகும்.
  • Key word;திருவள்ளுவர்-ஆன்மிக சிந்தனைகள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads