Pages

Friday, 6 April 2012

குருவும்-முட்டாள் சீடனும்


           ஒரு துறவி அவருக்கு ஐந்து சீடர்கள், ஒரு நாள் அவர் அணிந்தது இருந்த காவி உடை கிழிந்து விட்டது, அதனை தைக்க வேண்டி ஐந்து சீடர்களிடமும் காசு கொடுத்து ஊசி வாங்கி வரசொன்னார்.


             அந்த ஐந்து சீடர்களும் இதுவரை ஊசியை பார்த்தது இல்லை. கடைக்கு சென்றார்கள் ஊசி கேட்டார்கள், அவர்களும் கொடுத்தார்கள். ஆனால் அது ஊசி தான் என்பதை அவர்கள் நம்பவில்லை, நம்மை ஏமத்துகிரார்கள் என்று வேறு கடைக்கு சென்று விட்டார்கள் . அங்கும் அதையே கொடுத்தார்கள்.

            இறுதியில் நீங்கள் எல்லாம் எங்களை ஏமாத்த நினைகிறீர்கள்  என்று கூற, அந்த கடைக்காரன் இவைகள் முட்டாள் என புரிந்து கொண்டு, சீடர்களே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள், நடந்ததை கூற, சரி அதை எப்படி நீங்கள் ஊசி இல்லை என சொல்கிறீர்கள் என் கடைக்காரன் வினவினான். ஐவரும் சொன்னார்கள் எங்கள் குரு ஐந்து பேரை அனுப்பி ஒரு ஓசி வாங்கி வர சொன்னார். கண்டிப்பாக அது மிகவும் பெரியதாக தான் இருக்கும் என கூற, அவரும் ஒரு பெரிய பனை மரத்தை காண்பித்து இது தான் ஊசி தூக்கி கொண்டு போங்கள் என் கூறிவிட்டு அதற்குரிய காசுகளை வாங்கிகொண்டார்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads