நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாஅழகுபடுத்தலாம் என்கின்றனர் வீட்டு உள் அலங்கார நிபுணர்கள்.
- சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும்.
- அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது.
- கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும்.
- வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்சை போன்ற வர்ணங்களை சுவர்களுக்கு அடிப்பதும் வீட்டை பெரிதாக்கி காட்டும்.
- சீலிங்கும், சுவரும் தொட்டுக்கொள்ளும் இடத்தில் அழகான பார்டர் போல வால்பேப்பரில் ஒட்டுவது அறையின் அகலத்தை அதிகமாக்கி காட்டும்
- சிறிய அறையில் ஜன்னல் இல்லாமல் இருக்கிறதா? கவலை வேண்டாம். ஓவியங்களை சுவர்களில் தொங்கவிட வீடு அழகாவதோடு ஜன்னல் இல்லாத குறையை நீக்கும்
- சிறிய இடம்தான் இருக்கிறதா ஒரே அலமாரியில் அனைத்தையும் அடுக்குவது போல உள்ள வசதியான அலமாரியை தேர்தெடுப்பது நல்லது.
- புத்தகங்களை அடுக்க ஏற்ற உயரமான அலமாரிகளை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். அவை பழமையை பறைசாற்றும் வகையில் இருப்பது நலம். அதே சமயம் கண்களை உறுத்தாத வகையிலும் இருக்கவேண்டும்.

No comments:
Post a Comment