Pages

Monday, 16 April 2012

எள் துவையல்






 தேவையானப் பொருட்கள்:
கருப்பு அல்லது வெள்ளை எள்ளு – 1 கப்
தேங்காய் துருவல் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6 (எள் கசக்கும் என்பதால் மிளகாய் வேண்டுமானால் 2 அதிகரித்து கொள்ளவும்)
புளி – சிறிய கோலி அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீ  ஸ்பூன்

செய்முறை: வாணலியில் எண்ணெய் இல்லாமல் எள் இலேசாக வெடிக்கும் வரை வறுத்துக்கொள்ளவும்.
பிறகு தேங்காய் இலேசாக வறுத்துக்கொள்ளவும்.
பிறகு சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் வறுக்கவும்.
வறுத்தப் பொருட்கள் ஆறிய பிறகு மிக்சியில் போட்டு புளி
 மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உளுந்தம் பருப்பு சாதத்துடன் எள் துவையல் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
உளுத்தம் பருப்பு சாதம் செய்முறை முந்தைய பதிப்பில் வெளியிட்டு உள்ளேன்.
 எள் குறித்த தகவல்கள்:
■எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெய்யும் 16% மாப்பொருளும் உள்ளன.
■கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.
■வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
■வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.
கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்றொரு பழமொழியும்  உண்டு.
எள் குறித்த தகவல்களை மேலும் அறிய விரும்புவோர் இதை அழுத்தவும்.


 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads