நமது கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின்
பிறந்தநாள். முதலில் அவருக்கு எமது தளத்தின் மூலம் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அது சரி எவ்வளவோ கிரிகெட் வீரர்கள் தங்களது அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளனர் அப்படி இருக்க சச்சினை மட்டும் எதற்காக கடவுள் என கூற வேண்டும், கிரிக்கெட் என்றான் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சச்சின் தான், மேலும் அவர் செய்யாத சாதனைகளே இல்லை எனலாம்.
கிரிக்கெட் உலகில் உள்ள சாதனை பட்டியலில் தனது பெயரினை அனைத்து இடத்திலும் முத்திரைபதிதுள்ளார் . கிரிக்கெட் உலகில் முதல் முறையாக நூறு முறை நூறு ரன்களை கடந்து சாதனை புரிந்துள்ளார். அதுமட்டும் அல்ல ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்தது, அதிக சதம் அடித்தது, அதிக ஆட்டங்கள் விளையாடியது, அதிக முறை நான்குகளை அடித்தது என இவரின் சாதனைகள் ஏராளம். பாத்து வீச்சிலும் சச்சின் சளைத்தவர் அல்ல ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மிகவும் இக்கட்டான நிலையில் கங்குலி சச்சினையே பந்துவீச அழைப்பர். சச்சின் கங்குலியும் இணைந்து அதிகமான ரன்களை குவித்த துவக்க ஆட்டக்காரர்கள். இவர்கள் இணைந்து இரண்டு முறை 250 ரன்களை கடந்துள்ளனர், அவைகளின் முறையே 257 மற்றும் 258 ஆகும். இது மட்டும் அல்ல அதிக முறை அறுவை சிகிச்சை செய்த விளையாட்டு வீரர் என்ற சாதனையும் குறிப்பிடத்தக்கது.
சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என கபில்தேவ் முதல் பலர் கங்கணம் கட்டி திரிகின்றார்கள் . இவர்எப்போதும் தனது வாய் வார்தைகலான் பத்தி சொல்ல மாட்டார். குறைவாக பேசு அதிகமாக கேளு என்ற கருத்தை கொண்டவர். அதனால் இவர் பேசுவது மிகவும் குறைவு ஆனால் தனது பேட்டிங்கால் அதிகமாக பேசுவார். ஒரு இரண்டு ஆட்டங்கள் மட்டும் விளையாடி புகழ் அடித்தும் அவர்களை பிடிப்பது கடினம் ஆனால் இதனை சாதனைக்கு சொந்தகாரர் கிரிகெட் உலகில் கடவும் என அழைக்கப்படும் ஒருவர் இன்னும் எதோ புதிதாக விளையாட வந்த வீரர் போல ஏதும் அறியாத குழந்தை போல இருப்பது வியப்படைய செய்கிறது. சச்சினின் ஓய்வு பற்றி பேசிய அனைவருக்கும் சச்சின் ரசிகன் முறயில் நாங்கள் கூறும் பதில் என்னவென்றால் அவர் விளயடுவரை விளையாடுவார் இவரை பற்றி பேசுவதை விட்டு வேறு எதாவது வேலை இருந்தால் பாருங்கள் என்பதே எங்கள் பதில்.
எல்லாம் சரி ஓய்வு பற்றி நமது சச்சினின் பதில் " ஒரு விளையாட்டு வீரர் நன்றாக விளையடிகொண்டிருக்கும் பொது விலகுவது என்பது சுயநலமானது எப்போது தன்னால் மேலும் தொடர்ந்து விளையாட முடியாது என்று தோன்றும் போதே அவர் ஓய்வு பெறவேண்டும்" அப்படின்னு ஒரே வார்த்தைல நமது தல பத்தி சொன்னார்.
இந்தியாவில் மட்டும் அல்ல உலகின் எந்த மூலையிலும் கிரிகெட் என்றால் என்னவென்றே தெரியாத பல இடங்களிலும் சச்சினின் பெயர் தெரியும் . ஒபாமா அளித்த ஒரு பேட்டியில் எனக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாது எப்படி விளையாடுவது என்பதும் தெரியாது இருப்பினும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன் ஏன் என்றால் சச்சினின் நூறாவது சததிற்ககாக.
இப்படி நமது சாதனை நாயகனை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம், என்றும் பதினாறு என்பார்கள் சச்சின் இப்போதும் பதினாறு வயது இளைஞன் போலவே இருக்கிறார் எனவே அவருக்கு எங்களது 16வது பிறந்தநாள் வாழ்த்துகள்.

No comments:
Post a Comment