மறைந்த பழம்பெரும் நடிகர் எம். என். நம்பியாரின் மனைவி ருக்மணி நம்பியார் நேற்றிரவு மரணமடைந்தார்.
82 வயதாகும் ருக்மணி நம்பியார், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30 மணியளவில் ருக்மணி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையலகினர் பலர் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நம்பியார் - ருக்மணி தம்பதியருக்கு 2 மகன், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சுகுமாரன் நம்பியார் மாரடைப்பால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இவர் பா.ஜ.வில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். மற்றொரு மகன் மோகன் நம்பியார் தொழிலதிபராக உள்ளார். மகள் சினேகா சென்னையில் வசித்து வருகிறார்.
ருக்மணியின் இறுதிச் சடங்கு, பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடந்தது. இவரது மறைவுக்கு முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment