Pages

Wednesday, 11 April 2012

நல்ல செய்தி சிலிண்டர் பதிவுசெய்பவர்களுக்கு .

   சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய இனி நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை
 என்று இண்டேன் மண்டல மேலாளர் முரளி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பதிவு செய்ய தற்போது ஐ.வி.ஆர்.எஸ். முறையில் எஸ்.எம்.எஸ். அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆங்கிலத்தில் ஐ.ஓ.சி. என்று டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு வினியோகஸ்தரின் போன் நம்பரை with std code டைப் செய்ய வேண்டும். பின்னர் வாடிக்கையாளரின் நுகர்வோர் எண் ஆகியவற்றுடன் தமது செல்போனில் இருந்து 8124024365 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த எண்ணில் 24 மணி நேரமும் எல்லா நாட்களிலும் பதிவு செய்யலாம். இதற்கு முன்பு சிலிண்டர் வந்த 21 நாட்களுக்கு பிறகுதான் வினியோகஸ்தரின் கம்ப்யூட்டரில் பதிய முடியும்.
            இந்த புதிய முறையில் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே அடுத்த சிலிண்டருக்கு பதியலாம். இப்புதிய முறையால் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களில் பதிய மறுக்கின்றனர் என்ற புகார் வராது. தற்போது வாடிக்கையாளர் பதிவு செய்தபின் 30 முதல் 45 நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads