Pages

Saturday, 21 April 2012

கீரை சாம்பார்

தேவையானப்பொருட்கள்:
  • கீரை (எந்த வகை கீரையானாலும்) பொடியாக நறுக்கியது - 1 கப்
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • புளி - எலுமிச்சம் பழ அளவு
  • சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • எண்ணை - 2 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  • சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீளவாக்கில் வெட்டியது)
  • தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் போட்டு சற்று வறுத்து, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன், வேக வைத்த பருப்பையும், உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி ஊற்றவும். மேலும் சில வினாடிகள் கொதித்தப்பின், அதில் கீரையைப் போட்டுக் கிளறி விட்டு, மிதமான தீயில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி வைக்கவும். பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads