Pages

Saturday, 14 April 2012

மத்திய அரசு பணிகளுக்கான பரீட்சைகளை இனி தமிழ்மொழியில் எழுதலாம்

 .மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை இனிமேல் தமிழ்மொழியிலும் எழுதும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக மத்திய அரசு பணிப்பாளர் தேர்வாணையத்தின் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வரும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மாத்திரமே கேள்விகளுக்கு விடையெழுத அனுமதித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை அந்தந்த மாநிலங்களின் மொழியிலேயே எழுதுவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் பல்வேறு மாநிலங்களின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், தற்போது இதற்கு பலன் கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் மும்மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. அதாவது ஆங்கிலம். ஹிந்தி, மற்றும் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழி என மும்மொழிகளில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.
இதுகுறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ரகுபதி இன்று சென்னையில் கூறியதாவது:
மும்மொழிகளில் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை நடத்துவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஏப்ரல் 22-ம் தேதி மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் மும்மொழியிலான வினாத்தாள் தரப்படும். அதில் விண்ணப்பதாரர் தனது தாய் மொழியிலேயே பதில்களை எழுதலாம்.
மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புவோர்கள் கல்வித்தகுதி மட்டுமின்றி தட்டச்சு மற்றும் கணினி திறன் பெற்றிருப்பது அவசியம். இது போன்ற தனித்திறமைகளை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.விரைவில் மத்திய அரசின் ஒப்புதலோடு மத்திய அரசின் இடைநிலை மற்றும் கீழ்நிலை அளவிலான பணிகளுக்கு மும்மொழியிலான தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
2012-13 ஆண்டில் மத்திய அரசு காவலர் படைகளில் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த மும்மொழி வினாத்தாள் அமைவது அந்தந்த மாநில விண்ணப்பதாரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads