Pages

Tuesday, 10 April 2012

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சேவை

 ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சேவை
: விரைவில் பெங்களூரில் அறிமுகம்
   
தொலை தொடர்புத்துறையில் 2ஜி, 3ஜி ஆகியவற்றின் காலம் போய், விரைவில் 4ஜியின் காலம் துவங்க இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக 4ஜி சேவையை பாரதி ஏர்டெல் நிறுவனம் துவங்க இருக்கிறது. இச்சேவையின் அறிமுக விழா இன்று பெங்களூரில் நடைபெற்றது.
இதில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு 4ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இதில் கலந்து கொண்ட பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளதாவது,
பெங்களூரில் இன்னும் 30 நாட்களில் நாட்டின் முதல் 4ஜி சேவைகளை தொடங்க இருக்கிறோம். கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவைகளுக்கான ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. இதில் கொல்கத்தா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் மகராஷ்டிரா (மும்பை தவிர) பகுதிகள் அடங்கும். இப்பகுதிகளிலும் விரைவில் 4 ஜி சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறோம் என்றார்.
தொலைதொடர்புத் துறை அமைச்சர் கபில்சில் கூறும்போது, அனைத்து தர மக்களும் வாங்குவதற்கு ஏற்ற வகையில் விலை குறைந்த தொலைதொடர்பு சாதனங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், உண்மையான தொலை தொடர்பில் புரட்சி என்பது கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகள் தகவல் தொடர்பில் இடம்பெறுவதே என்றும் அவர் கூறினார்.
Key word: தொழில்நுட்பம்,

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads