Pages

Sunday, 29 April 2012

பிளஸ் டூ தேர்வு முடிவு மே 10ந் தேதியிலிருந்து 15ந் தேதிக்குள் வெளியிட வாய்ப்புகள்

  • தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பிளஸ்டூ தேர்வு எழுதினர்.
  • இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நடைபெற்றது. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள்
  • ஒரு மையத்திலும் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் மற்றொரு மையத்திலும் திருத்தப்பட்டன.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த 27ந் தேதி முடிவடைந்தது.
  • சுமார் 75 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது. மதிப்பெண் பட்டியல் தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • மொழிப்பாடங்களுக்கு 2.25 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 
  • பணி மே 2ம் தேதியுடன் முடிவடைகிறது. 
  • பின்னர் மதிப்பெண் பதிவு செய்து தேர்வு துறைக்கு அனுப்பப்படும்.
  • மதிப்பெண் பட்டியல் தயாரிக்க 10 நாட்கள் ஆகும்.
  • எனவே பிளஸ் டூ தேர்வு முடிவு மே 10ந் தேதியிலிருந்து 15ந் தேதிக்குள் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads